ADDED : ஜூலை 03, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சன்மார்க்க சங்க ஆண்டு விழா சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்குடி, அமராவதி புதுார் சங்கத்தினர் திருவருட்பா பாராயணம் செய்தனர். வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தன. மாலையில் பரிசளிப்பு விழா சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணியன் பக்தி பாடல் பாடினார். பழனி ராகுலதாசன் வரவேற்றார். தட்சிணாமூர்த்தி அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் தேவநாவே , புலவர் மெய்யாண்டவர், ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வடலூர் தலைமை சன்மார்க்க சங்க மாநில தலைவர் அருள் நாகலிங்கம் பரிசு வழங்கினார். அய்யாச்சாமி நன்றி கூறினார்.