/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு; 3 மடங்கு வரை விலை வைக்கும் வியாபாரிகள்
/
சிங்கம்புணரி தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு; 3 மடங்கு வரை விலை வைக்கும் வியாபாரிகள்
சிங்கம்புணரி தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு; 3 மடங்கு வரை விலை வைக்கும் வியாபாரிகள்
சிங்கம்புணரி தாலுகாவில் வைக்கோல் தட்டுப்பாடு; 3 மடங்கு வரை விலை வைக்கும் வியாபாரிகள்
ADDED : பிப் 07, 2024 12:02 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் நெல் சாகுபடி குறைவால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் 3 மடங்கு வரை விலை வைத்து விற்கின்றனர்.
இத்தாலுகாவில் இந்தாண்டு குறைந்த அளவிலேயே நெல் சாகுபடி செய்யப்பட்டது.இதனால் வைக்கோல் வரத்து தேவைக்கு ஏற்ற அளவில் இல்லாமல் போனது. சிங்கம்புணரி பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு மாடுகளும் ஏராளமான கோயில் மாடுகளும் உள்ளன.
வைக்கோல் பற்றாக்குறையால் கால்நடை வளர்ப்போர் கவலையில் உள்ளனர். சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோலை கூடுதல் விலைகொடுத்து வாங்கி வருகின்றனர். நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில வியாபாரிகள் வழக்கமான விலையை விட ஒரு கட்டுக்கு 3 மடங்கு வரை லாபம் வைத்து விற்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து ஒரு கட்டு வைக்கோலை 20 ரூபாய்க்கு வாங்கி ஏற்றி இறக்கக் கூலி, இயந்திர வாடகை சேர்த்து 300 ரூபாய் வரை விற்கிறார்கள்.
தினேஷ்,சிங்கம்புணரி:இந்தாண்டு மழைக்குறைவு,பெரியாறு கால்வாயில் தண்ணீர் வராதது உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் விவசாயம் நடைபெறவில்லை.போர்வெல் தண்ணீர் மூலம் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் வைக்கோல் கிடைப்பது குறைந்து விவசாயிகள் வைக்கோலுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி வந்த வைக்கோலை இப்பகுதியில் பல மடங்கு லாபம் வைத்து விற்கின்றனர். இதனால் மாடுகளுக்கு வைக்கோல் கிடைப்பது பெரிய பிரச்னையாக உள்ளது. வேளாண்மைத் துறையே இப்பகுதி கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை குறைந்த விலையில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

