நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்,- திருப்புத்தூர் அருகே தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். ஆசிரியர் செந்தாமரைச்செல்வி தொகுத்து வழங்கினார். முதல்வர் சத்யா அறிக்கை வாசித்தார். கல்வி குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார்.பேச்சாளர் கவிதாஜவகர் சிறப்புரை ஆற்றினார்.
தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், வாழ்த்துரை வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கு பரிசு, சான்று வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் அர்ஷியா பாத்திமா நன்றி கூறினார்.

