நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : புனித ஜான் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா முன்னாள் மாணவர் சினிமா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தலைமையில் நடந்தது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை சகாயசாந்தி அறிக்கை வாசித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பாலமுருகன், கவுன்சிலர் தனலட்சுமி பங்கேற்றனர். மாணவ மாணவியர் கலைநிகழ்ச்சி நடந்தது.

