ADDED : செப் 27, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கல்லல் ஒன்றியம் நடராஜபுரம் ராமாயி நினைவு துவக்கபள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். பள்ளி செயலர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமரன், வட்டார கல்வி அலுவலர் ராமகோதை முன்னிலை வகித்தனர். பள்ளி முகவாண்மை குழு தலைவர் உடையப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளி நிர்வாக குழு தலைவர் முத்துகுமார் நன்றி கூறினார்.