/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்
/
நெருக்கடியில் பள்ளி உயர்தர ஆய்வகங்கள்
ADDED : டிச 28, 2025 05:29 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட உயர்தர ஆய்வகங்கள் நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 6990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கடந்தாண்டு உயர்தர ஆய்வகங்கள் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 20 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா இரண்டு இருக்கையுடன் 10 கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி.,புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், பேட்டரிகள், அதிவேக இணையதள வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து செயல்பாட்டில் உள்ள நிலையில், ஆய்வகத்திற்கு தனி கட்டடம் இல்லாததால் ஏற்கனவே உள்ள வகுப்பறையிலேயே செயல்படுகிறது.
பல பள்ளிகளில் ஏற்கனவே கட்டடப் பற்றாக்குறையால் இட நெருக்கடி இருக்கும் நிலையில் வகுப்பறையை பிரித்து ஒரு பக்கமாக ஆய்வகம் செயல்படுகிறது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

