/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் குவிந்த பள்ளி மாணவர்கள்
/
கீழடியில் குவிந்த பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 24, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தை நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர்.
கீழடி அருங்காட்சியகத்தில் ஆறு கட்டட தொகுதிகளில் தனித்தனியாக இரண்டிரண்டு தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை காண தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று விடுமுறை என்பதால் கோவை, தேனி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர். தொல்லியல் ஆய்வாளர்கள் மாணவ, மாணவியர் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கமளித்தனர்.

