/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிக்கடி மின் துண்டிப்பால் பள்ளி மாணவர்கள்; மாவட்டம் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் அவதி
/
அடிக்கடி மின் துண்டிப்பால் பள்ளி மாணவர்கள்; மாவட்டம் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் அவதி
அடிக்கடி மின் துண்டிப்பால் பள்ளி மாணவர்கள்; மாவட்டம் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் அவதி
அடிக்கடி மின் துண்டிப்பால் பள்ளி மாணவர்கள்; மாவட்டம் முழுவதும் இந்த நிலை நீடிப்பதால் அவதி
ADDED : ஏப் 13, 2025 07:46 AM

தமிழகத்தில் தற்போது அரசு பொதுத்தேர்வு, தொடக்க நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.
பொதுத்தேர்வு நடக்கும் காலங்களில் முழுமையாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்த நிலையில் மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்துார் உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
சிவகங்கை, திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பகல் இரவு நேரங்களில் அடிக்கடி 10 நிமிடம் 5 நிமிடம் என மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு படிப்பவர்கள் மிகுந்த சிரமப் படுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு சிவகங்கை நகர், ரோஸ் நகர், பனங்காடி ரோடு, ஆயுதப்படை குடியிருப்பு, தொண்டி ரோடு உள்ளிட்ட பகுதியில் இரவு 9:50 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் 10:30க்கு தான் வந்தது.
இதேபோல் பகல் நேரங்களில் அடிக்கடி மதிய வேளையில் துண்டிக்கப்பட்டது. சில நேரங்களில் காலை நேரத்தில் துண்டிக்கப்படுவதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் பணிக்கு செல்லும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
நுாதனமுறையில் எதற்காக துண்டிக்கிறார்கள் என்று தெரியாமலேயே 5 நிமிடம் 10 நிமிடம் துண்டிக்கப்படுகிறது. அலுவலக பணிகள் பாதிக்கப்படுகிறது.
மானாமதுரையிலும் மின்வெட்டு
மானாமதுரை ஒட்டிய நகர் பகுதிக்கு சிப்காட் துணை மின் நிலையத்தில்இருந்தும், மானாமதுரையை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு ராஜ கம்பீரம் மின் பகிர்மானத்திலிருந்தும் மின் சப்ளை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களாக கடுமையான கோடை வெயில் அடித்து வருவதை தொடர்ந்து மின் தேவையும் அதிகரித்துள்ளதால் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு வரும் மெயின் லைனில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை அடிக்கடி மின்வெட்டு நீடித்தது.கடும் கோடை வெயிலால்புழுக்கம் தாங்க முடியாமல் மக்கள் அவதிக்குஉள்ளாகினர்.
மின்துறை பணியாளர்கள் கூறுகையில், மாவட்டத்தில் அறிவிப்புடன் கூடிய மின்தடை மட்டுமே பராமரிப்பு பணிக்காக செய்யப்படுகிறது. அவ்வபோது 10 நிமிடம் 5 நிமிடம் நடைபெறும் மின் தடைகள் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களில் உள்ள மின் பழுது பணிக்காக மின் தடை செய்யப்பட்டு பணி செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு காரைக்குடி பகுதியில் இருந்து வரக்கூடிய மின்சாரம் தடைபட்டது. பின் சரிசெய்யப்பட்டு வழங்கப்பட்டது என்றனர்.