/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநகராட்சி வார்டு கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
/
மாநகராட்சி வார்டு கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
மாநகராட்சி வார்டு கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
மாநகராட்சி வார்டு கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
ADDED : அக் 28, 2025 03:51 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி யில் நடந்த சிறப்பு கூட்டத்தில், பள்ளி ஆசிரியர்கள் பள்ளி தரம் குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 1 வது வார்டு முதல் 18 வது வார்டிற்கான சிறப்பு கூட்டம் நடந்தது. அந்தந்த பகுதியில் தனித் தனியாக நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதி களில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.
15வது வார்டிற்கு கண்ண தாசன் மண்டபத்தில் கூட்டம் நடந்தது. காரைக்குடி ராமநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதன் செட்டியார் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்காக வந்த போதும் போதிய வகுப்பறை இல்லாததால் 500 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. போதிய வகுப்பறை வசதி, மாணவர்கள் உணவு அருந்துவதற்கு போதிய இட வசதி அமைதி தர கோரிக்கை விடுத்தனர்.
மாநகராட்சி உயர் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை வேண்டியும், இடிந்து விழுந்த சுற்றுச் சுவரை உடனடியாக கட்டித் தர வலியுறுத்தியும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

