/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழிலாளர் நல வாரிய நிதி மூலம் கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
/
தொழிலாளர் நல வாரிய நிதி மூலம் கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
தொழிலாளர் நல வாரிய நிதி மூலம் கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
தொழிலாளர் நல வாரிய நிதி மூலம் கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
ADDED : அக் 28, 2025 03:47 AM
சிவகங்கை: தொழிலாளர் நல வாரியம் மூலம் கல்வி உதவி தொகை பெற டிச., 31க்குள் விண்ணப்பிக்க லாம் என சிவகங்கை தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் மற்றும் அவர்களை சார்ந்தோர், தொழிலாளர் நல வாரியம் மூலம் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனம், உணவு மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழி லாளர் பங்கு ரூ.20, நிறுவன பங்கு ரூ.40 என ஒவ்வொரு தொழிலுக்கும் ரூ.60 என கணக்கிட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
நடப்பு ஆண்டிற்கான (2025) தொழிலாளர் நல நிதியினை 2026 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் நல நிதி செலுத்தும் நிறுவன தொழிலாளர்களின் குழந்தைகள் நர்சரி பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரையும், திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மூக்கு கண்ணாடி, பாடநுால், கல்வி ஊக்கத்தொகை, தையல் இயந்திரம், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, உயர்கல்விக்கான நுழைவு தேர்வு உதவி தொகை, மாவட்ட அளவில் விளையாட்டு உதவி தொகை வழங்கப்படுகிறது.
இத்தொகையை பெற தொழிலாளரின் மாத சம்பளம் ரூ.35,000க்குள் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் பெற்றோ, www.lwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை- 600 006 என்ற முகவரிக்கு டிச., 31க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

