/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடையை சூழ்ந்த பாதாள சாக்கடை கழிவு நீர்: மக்கள் அவதி
/
ரேஷன் கடையை சூழ்ந்த பாதாள சாக்கடை கழிவு நீர்: மக்கள் அவதி
ரேஷன் கடையை சூழ்ந்த பாதாள சாக்கடை கழிவு நீர்: மக்கள் அவதி
ரேஷன் கடையை சூழ்ந்த பாதாள சாக்கடை கழிவு நீர்: மக்கள் அவதி
ADDED : அக் 28, 2025 03:47 AM

காரைக்குடி: காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பின்புறம் பாதாள சாக்கடை நிரம்பி வெளியேறி ரேஷன் கடையை சூழ்ந்ததோடு சாலைகளிலும் பெருக் கெடுத்து ஓடியதால் மக்கள் சிரமப் படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சி யில் 2017ம் ஆண்டு பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது. கழிவு நீரை சுத்திகரிக்க, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.
முதலாவதாக 32 ஆயிரம் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விடுபட்ட பகுதிகளுக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடைபெறுகிறது. மொத்தம் 191.21 கி.மீ., தூரத்திற்கு இணைப்பு வழங்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை வெளியேறத் தொடங்கியுள்ளது. கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் உள்ளிட்ட கழிவு கலந்து கருமையான, அதிக துர்நாற்றத் துடன் வெளியேறுகிறது.
காரைக்குடி அரசு மருத்துவமனை, சுப்பிரமணிய புரம் சூடாமணிபுரம் பழைய அரசு மருத்துவமனை உதயம் நகர் உட்பட பல பகுதிகளிலும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. பழைய அரசு மருத்துவமனை பின்புறம் ஆலங்குடியார் பள்ளி வீதியில் சாக்கடை ஆறு போல் ஓடி அருகில் உள்ள புதிய ரேஷன் கடை கட்டடத்தை சூழ்ந்துள்ளது. உதயம் நகரில் சாலையின் நடுவே சாக்கடை ஓடுவதால் மக் களுக்கு சுகாதாரக் கேடு நிலவுகிறது.

