/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அக்.27, 30ல் பள்ளிகளுக்கு விடுமுறை
/
அக்.27, 30ல் பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : அக் 25, 2025 04:14 AM
சிவகங்கை: மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்., 27 மற்றும் 30 இரு நாட்களுக்கு 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா அக்.27ல் நடக்கிறது. அக்.30ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நடக்கிறது. இவ்விரு விழாக்களை முன்னிட்டு பஸ் போக்குவரத்து மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி அக்., 27 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் மட்டும் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்துார், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
அதற்கு பதில் வேறு ஒருநாளில் பள்ளிகள் இயங்க முதன்மை கல்வி அலுவலர் மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

