ADDED : டிச 30, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தமிழ்நாடு அறிவியல் இயக்க வருடாந்திர நாட்காட்டி வெளியீடு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னி, மாவட்ட துணைத்தலைவர் சேவற்கொடியோன் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலாளர் அலெக்சாண்டர் துரை வரவேற்றார். முதல்வர் முருகன் வருடாந்திர நாட்காட்டியை வெளி யிட்டார்.
மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, முதல்வர் சாருமதி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பொரு ளாளர் பிரபு நன்றி கூறினார்.

