
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தாளாளர் கிறிஸ்டி ராஜ் துவக்கி வைத்து மாணவர்களின் அறிவியல் மற்றும் இயற்கை உணவு சம்பந்தமான அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு உற்சாகப்படுத்தினார்.
பேராசிரியர் தம்பிராஜ்,ஆசிரியை பவானி மற்றும் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்பாடுகளை தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி,மேலாளர் சாலமன், முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

