ADDED : டிச 21, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்புத்துார் கிளை மாநாடு நடந்தது.
மாவட்டத் தலைவர் பேராசிரியர் கோபிநாத் தலைமை உரையாற்றினார்.
மாவட்டத் துணைத்தலைவர் பாபா அமீர்பாதுஷா, கிறிஸ்துராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி நிறுவனர் விக்டர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் சேகர் வரவேற் றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அறிவியல் இயக்க செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக ஏ.டி.விக்டர், செயலாளராக மெஹர்பானு, பொருளாளராக செந்தாமரைச் செல்வி, துணைத்தலைவராக ஸ்ரீதர் ராவ், துணைச் செயலாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
செயற்குழு உறுப்பினர் ராஜயோகம் நன்றி கூறினார்.

