/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கெட்டுப்போன மீன், இறால் பறிமுதல்
/
கெட்டுப்போன மீன், இறால் பறிமுதல்
ADDED : டிச 21, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டைபேரூராட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை சந்தை கூடும். இந்த சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன், மீன் வளத்துறை ஆய்வாளர் கோமதி, பேரூராட்சி மேற்பார்வையாளர் தென்னவன் உள்ளிட்ட பணியாளர்கள் சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 12 கிலோ சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி, கெட்டுப்போன மீன் மற்றும் இறால் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்து வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கி இதுபோல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

