ADDED : ஆக 29, 2026 07:02 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அடங்கிய குழுவில் இடைநிலைபிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி,ஜோசப் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் செல்வ விநாயகர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளிகள் முதல் இரண்டு இடங்களை வென்றன.
மெட்ரிக் பள்ளி குழுவில் ஜூனியர் பிரிவில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி, சீனியர் பிரிவில் காரைக்குடி டி.டி. நகர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி,ஏரியூர் காந்தி பள்ளி, சூப்பர் சீனியர் பிரிவில் திருப்புத்துார் பாபா அமீர் பாதுஷா மேல்நிலைப் பள்ளி,புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி முதல் இரண்டு இடங்களை வென்றன.
மாவட்டத்துணைத் தலைவர் பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். திருப்பத்தூர் கிளைத் தலைவர் விக்டர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தனர். பாபா பள்ளி முதல்வர் வரதராஜன் வரவேற்றார். கிளைச் செயலாளர் மெஹர் பானு நன்றி கூறினார்.
