ADDED : மார் 17, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : திருப்புத்துாரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். சுயசார்பிற்கான அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற கருப்பொருளில் கோவிலுார் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சந்திரமோகன் பேசினார்.
கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி தாளாளர் விக்டர், நேஷனல் கேட்டரிங் கல்லுாரி தாளாளர் சையது, மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், சிவகங்கை கிளை தலைவர் மணவாளன், காரைக்குடி கிளை செயலாளர் முனியப்பன் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பிரபு நன்றி கூறினார்.