ADDED : அக் 31, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளி, சடையமங்கலம் நடுநிலை பள்ளி, அனுமந்தக்குடி அரசு மேல்நிலை பள்ளி, சிறுவனுார் அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்களிடத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாடுகளை கொண்டு செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாக்கியம், இந்திரா, கிருபா, மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கண்ணங்குடி அறிவியல் இயக்க கிளை செயலாளர் குருமூர்த்தி வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் பிரபு அறிவியல் பிரசார இயக்க வளர்ச்சி, பணிகள், துளிர் வினாடி வினா, துளிர் திறனறிதல் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார்.

