/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரித்த ரோட்டில் அலறும் வாகன ஓட்டிகள்
/
அரித்த ரோட்டில் அலறும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 17, 2024 04:58 AM

மானாமதுரை: மானாமதுரை பைபாஸ் ரோட்டிலிருந்து அண்ணாத்துரை சிலை பகுதிக்கு செல்லும் சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பதறி வருகின்றனர்.
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நான்கு வழி சாலையில் மானாமதுரை அமைந்துஉள்ளது. மதுரையிலிருந்து பஸ்களில் வரும் கீழ்கரை பகுதியைச் சேர்ந்த பயணிகள் பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சர்வீஸ் ரோட்டில் தல்லாகுளம் முனியாண்டி கோயில், அண்ணாத்துரை சிலை பஸ் ஸ்டாப் வழியாக கீழ்கரை பகுதிக்கு செல்ல வேண்டும்.
பைபாஸ் பஸ் ஸ்டாப் பகுதியிலிருந்து அண்ணாத்துரை சிலை வரை உள்ள சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் இரவில் வாகன ஓட்டிகளும், பயணிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த ரோட்டில் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். சர்வீஸ் ரோட்டை சீரமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.