/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 05, 2024 06:09 AM

சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாத்தப்பன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் தி.மு.க.,தேர்தல் அறிக்கை எண் 311ஐ நிறைவேற்ற கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, காளீஸ்வரன், சிங்கராயர், ரேவதி, ஆறுமுகம், எழிலரசி, அந்தோணிராஜ், டேனியல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

