/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வாபசா
/
அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வாபசா
அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வாபசா
அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வாபசா
ADDED : டிச 11, 2025 05:23 AM
திருப்புவனம்: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை திருடு போனது சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, விசாரணையின் போது ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் அஜித்குமாரை போலீசார் துன்புறுத்திய போது அலைபேசியில் பதிவு செய்த கோயில் ஊழியர் சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சக்தீஸ்வரன், அஜித்குமார், வழக்கறிஞர் கார்த்திக்ராஜா ஆகியோரது வீடுகளுக்கும் தலா இரண்டு ஆயுதப்படை போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் கார்த்திக்ராஜாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார்.
போலீசார் கூறுகையில், 'அஜித்குமார் வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் பகுதிகளுக்கு போலீசார் அனுப்பப்பட்டதால் ஒரு நாள் மட்டும் போலீசார் செல்லவில்லை. தற்போது மீண்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர், என்றனர்.

