ADDED : செப் 08, 2025 06:21 AM
கீழடி : கீழடியில் வையை உழவர் குழு சார்பில் 5வது ஆண்டாக விதை திருவிழா நேற்று நடந்தது. பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கீழடியை மையப்படுத்தி வருடம் தோறும் பராம்பரிய விதை திருவிழா நடைபெறுகிறது.
இயற்கை உரம் தயாரிப்பது, பாரம்பரிய நெல் ரகத்தினால் விளையும் பயன்கள் குறித்து திருவிழாவில் எடுத்துரைத்தனர். விதை கண்காட்சியில் தூயமல்லி, பூங்கார், மிளகி, நொருங்கன், சித்திரைக்கார் உள்ளிட்ட விதை நெல் ரகங்கள் விவசாயிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. காலை 9 மணிக்கு கீழடி அருங்காட்சியக வாசலில் இருந்து முளைப்பாரி ஊர்வலத்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். வையை 5ம் ஆண்டு மலரை விவசாயி கோபாலகிருஷ்ணன் வெளியிட டாக்டர் பிரேமா, சுற்றுச்சூழலியாளர் சதாசிவம் பெற்றனர். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.