ADDED : மார் 08, 2024 12:59 PM
சிவகங்கை: சிவகங்கை தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் செயலாளர் யுவராஜ் வரவேற்றார். சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் அறிமுகம் செய்தார்.
சங்க செயலாளர் ராமசந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், குணசேகரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தரமாணிக்கம், வழக்கறிஞர் ராம்பிரபாகர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் மூரா சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் புதிய தலைவராக அன்புத்துரை, துணை தலைவர் சரளாகணேஷ், பாண்டியராஜன், செயலாளராக மாலா, இணை செயலாளர்களாக ரமேஷ் கண்ணன், பாலசுப்பிரமணியன், பொருளாளராக பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்களாக முத்துப்பாண்டியன், முருகானந்தம், முத்துராஜா, சுப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் விருது பெற்ற நடராஜன், பால்ராஜ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

