/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கைம்பெண்களுக்கு சுயதொழில் மானியம்
/
கைம்பெண்களுக்கு சுயதொழில் மானியம்
ADDED : செப் 20, 2024 06:48 AM
சிவகங்கை: மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் கைம்பெண்கள் சுய தொழில் புரிய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் வசிக்கும்கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண், நலிவுற்ற பெண், ஆதரவற்ற மற்றும் பேரிளம் பெண்கள் சுய தொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைய ஏற்பாடு செய்யப்படும். இதற்காக சமூக நலன், மகளிர் உரிமை துறையின் கீழ் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற வயது 25 முதல் 45 வரை உள்ள கைம்பெண்கள் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து, உறுப்பினராக இருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குமிகாமல் இருத்தல் வேண்டும்.
வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே மானியம் தரப்படும். வருமான சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, தற்போது வசிக்கும் முகவரி சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ளோர் tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு பின் ஆவண நகல், சுய தொழில் துவங்குவதற்கானசுய கருத்துருவினை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பயன்பெறலாம், என்றார்.