/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை
/
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை
டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை
ADDED : மே 22, 2025 12:17 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மருந்து வழங்கப்படுகிறது. இவற்றை மாவட்ட மருத்துவத்துறை நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் 19, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 49 செயல்பட்டு வருகின்றன. இது தவிர அரசு அனுமதியுடனும் தனியார் கிளினிக், மருத்துவமனைகள் செயல்படுகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் முறைப்படி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் சில கிராமப்புறங்களில் டாக்டருக்கு படிக்காமலேயே சிலர் மருந்து கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
கீழப்பூங்குடி, மதகுபட்டி சுற்றியுள்ள ஓலக்குடி, அரளிகோட்டை, கட்டாணி பட்டி, ஏரியூர் பகுதிகளில் சிலர் டாக்டருக்கு படிக்காமலேயே சிகிச்சை அளிக்கின்றனர். இவர்களால் கொடுக்கப்படும் வலி மாத்திரை சாப்பிடுவதால் கிட்னி பிரச்னை உள்ளிட்ட பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. மருந்து கடை வைத்திருக்கும் சிலர் டாக்டர் அனுமதி இல்லாமல் ஊசி போடுவது, டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்குவதாக டாக்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
டாக்டர் சீட்டு இல்லாமல் அதிகமாக விற்கப்படும் காப் சிரப், வலி நிவாரணி மாத்திரை, துாக்க மாத்திரை கடைகளில் விற்கப்படுவதை மருத்துவத்துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என அரசு டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.