/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மினி மாதுளை விற்பனை
/
திருப்புவனத்தில் மினி மாதுளை விற்பனை
ADDED : ஜன 14, 2025 10:40 PM

திருப்புவனம்; திருப்புவனத்தில் நேற்று மினி மாதுளை பழங்கள் கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்பட்டன.
கோடை கால பழங்களான மாதுளை ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு தமிழகத்தில் விற்பனையாகும். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன. பருவ நிலை மாற்றத்தால் இந்த ஆண்டு மாதுளை விளைச்சல் பாதித்துள்ளன.
ஒரு மாதுளை 180 முதல் 300 கிராம் இருக்கும். கிலோ ரூ.150 முதல் 250 வரை விற்கப்படும். ஆனால் தற்போது குளிர்காலத்தில் மாதுளை விற்பனைக்கு வந்துள்ளன. அதிலும் 30 முதல் 50 கிராம் எடையில் மினி சைஸ் மாதுளையாக வந்துள்ளன. இந்த பழம் கிலோ ரூ.50 க்கு விற்கின்றனர். கிலோவிற்கு 25 பழம் இருக்கும். பெரிய பழங்கள் கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்கின்றனர்.
மாதுளை வியாபாரி காதர் கூறியதாவது, தினமும் 200 கிலோ வரை விற்கும். தற்போது பச்சை திராட்சைக்கு தான் சீசன். இருப்பினும் மாதுளை அதிகளவில் விற்கிறது. வயிற்று புண்ணை ஆற்றும் சக்தி இப்பழத்திற்கு உண்டு, என்றார்.