ADDED : ஜூலை 05, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; கல்லல் வட்டார வேளாண்மை துறை சார்பில், தட்டட்டியில் விவசாயிகளுக்கு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் சண்முக ஜெயந்தி தலைமையேற்றார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு ஏற்ப நெற்பயிர்ரகங்கள், பாரம்பரிய மரபியல் பண்பு, வறட்சி தாங்கி வளரும் தன்மை குறித்து பேசினார்.
கல்லல் வேளாண்மை உதவி இயக்குனர் அழகுராஜா தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்பிரியங்கா, குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராமகிருஷ்ணன், துணை வேளாண்மை அலுவலர் சேகர், உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு, நெல் விவசாயம் குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. அனைத்து துறை அலுவலர் மூலம் கண்காட்சி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.