ADDED : பிப் 15, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் தொல்லியலின் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
வரலாற்று துறை தலைவர் வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) இந்திரா தலைமை வகித்தார். தொல்நடைக்குழு நிறுவனர் காளிராஜா முன்னிலை வகித்தார். தொல்லியல் ஆய்வாளர் பாலமுரளி தொல்லியல் குறித்து பேசினார். தொல்நடைக்குழு செயலாளர் நரசிம்மன், செயற்குழு உறுப்பினர் வித்யா, அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவருக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.
ஏற்பாட்டை பேராசிரியர்கள் அஸ்வத்தாமன், முனீஸ்வரன் செய்திருந்தனர்.

