நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து இணையவழி வங்கி பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கை நடத்தினர்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார்.காளையார்கோவில் நிதி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கவிபிரபா இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகள் மேற்கொள்ளும் முறைகள் குறித்தும், பாதுகாப்பான முறையில் இணையவழி வங்கி பரிவர்த்தனை செய்வதன் அவசியம் குறித்தும் பேசினார். வணிகவியல் கணிப்பொறி பயன்பாடு மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் கொங்கேஸ்வரன் நன்றி கூறினார்.

