/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல்கலையில் மூத்த குடிமக்கள் தினம்
/
பல்கலையில் மூத்த குடிமக்கள் தினம்
ADDED : செப் 20, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி அழகப்பா பல்கலை வாழ்நாள் கல்வியியல் துறை சார்பில் பல்கலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் நிர்வாக பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் ரவி தலைமையேற்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சந்திரசேகர் பேசினார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராம் கல்வியியல் புல முதன்மையர் கலையரசன் வாழ்த்தினர்.கல்வியியல் துறை தலைவர் அருணாச்சலம் வரவேற்றார்.