/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கல்வித்துறை வளாகத்தில்செப்டிக் டேங்க் கழிவு நீர் தேக்கம் நோய் அச்சத்தில் ஊழியர்கள் தவிப்பு

ADDED : மே 23, 2025 11:44 PM

சிவகங்கை:சிவகங்கையில் கல்வித்துறை வளாக செப்டிக் டேங்க் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஊழியர்களுக்கு சுகாதாரக்கேடு அச்சம் நிலவுகிறது.
சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக அலுவலக கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
1982 ம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வலுவலக கட்டடம் சிதிலமடைந்து வரும் நிலையில் தான், புதிதாக கலெக்டர் அலுவலக கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதே நேரம் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அலுவலக கட்டடங்களை பராமரிக்காமல் விட்டதால் கூரை சுவர் இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகின்றன. குறிப்பாக கல்வித்துறை அலுவலக வளாக கட்டடத்தில் கல்வி, சுகாதாரம், புள்ளியியல், கால்நடை, வேளாண்மை ஆகிய துறைகளின் கீழ் 300 க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்க தனியாக செப்டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டேங்கில் சேகரமாகும் கழிவுகளை பொதுப்பணித்துறையினர் அகற்றுவதே இல்லை. இதனால் செப்டிக் டேங்க் சிதிலமடைந்தும், கழிவு நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலெக்டர் அலுவலக வளாக விளையாட்டு திடலில் தான் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் விளையாட்டு திடலை நோக்கி வருவதால், சுகாதாரக்கேடு அச்சத்தில் அலுவலர்கள் தவித்து வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் செப்டிக் டேங்குகளை சீரமைத்து, தடையின்றி கழிவு நீர் சேகரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.