/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தொடர் கொலைஎஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றம்
/
சிவகங்கையில் தொடர் கொலைஎஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றம்
சிவகங்கையில் தொடர் கொலைஎஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றம்
சிவகங்கையில் தொடர் கொலைஎஸ்.ஐ.,க்கள், போலீசார் மாற்றம்
ADDED : நவ 07, 2024 01:31 AM
சிவகங்கை: சிவகங்கையில் தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து 3 கொலை சம்பவங்கள் நடந்ததால் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட தனிப்பிரிவு போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும் குற்றச்சம்பவங்களை குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் 6 பேரை சட்டம் ஒழுங்கு பணிக்கும், சட்டம் ஒழுங்கு பிரிவிலுள்ள 6 பேரை தனிப்பிரிவுக்கும் மாற்றியுள்ளார். அதேபோல் சிவகங்கை எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணனை சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், எஸ்.ஐ., வைரமணியை திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருக்கோஷ்டியூரில் பணிபுரிந்த எஸ்.ஐ., சஜீவ்வை சிவகங்கை நகருக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.