/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தொடர் திருட்டு: அச்சத்தில் மக்கள்
/
சிவகங்கையில் தொடர் திருட்டு: அச்சத்தில் மக்கள்
ADDED : பிப் 07, 2024 12:14 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி, வீடுபுகுந்து தாக்கி கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களால் சிவகங்கை மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26ம் தேதி அதிகாலை வீட்டில் துாங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபரை கம்பியால் தாக்கி வீட்டில் இருந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
2020 ஜூலை 13 இரவு கல்லுவழி அருகே உள்ள முடுக்கூரணி ராணுவ வீரர் வீட்டில் இதேபோல் கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் அவரது தாய் மற்றும் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து தப்பினர்.
2023 ஜன.10 இரவு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்திலும் வீட்டிற்குள் புகுந்து தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கடந்த அக். மாதம் சிவகங்கை வந்தவாசி ரோட்டில் அன்பு நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி மாரிமுத்து 48. இவரது பேரனை பள்ளி முடித்து வந்தவாசி ரோட்டில் அழைத்து சென்றுள்ளார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் கழுத்திலிருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அதேபோல் கூமாச்சி பட்டியைச் சேர்ந்த ராமாயி 62, சிவகாமி 72 கொட்டாப்பட்டி மடப்புளி கண்மாய் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத இருவர் டூவீலரில் வந்து ராமாயி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதேபோல் சிவகங்கை தாலுகாவிலும், காளையார்கோவில் பகுதியிலும் தொடர் திருட்டு வழிப்பறியில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து திருட்டு பயத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

