/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொள்ளை
/
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொள்ளை
ADDED : பிப் 20, 2024 12:13 AM
சிவகங்கை, - சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு,வழிப்பறி, வீடு புகுந்து தாக்கி கொள்ளை, கோவில்கள், சர்ச்களில் கொள்ளை, போலீசுக்கு மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26ம் தேதி அதிகாலை வீட்டில்துாங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபரை கம்பியால் தாக்கி வீட்டில்இருந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடந்த அக். மாதம் சிவகங்கை வந்தவாசி ரோட்டில் அன்பு நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி மாரிமுத்து 48. இவரது பேரனை பள்ளி முடிந்து வந்தவாசி ரோட்டில் அழைத்து சென்றுள்ளார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் கழுத்திலிருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பினர்.
அதேபோல் கூமாச்சி பட்டியைச் சேர்ந்த ராமாயி 62, சிவகாமி 72 இருவரும் டூவீலரில் பாகனேரியில்இருந்து மேல வெளஞ்சம் பட்டிக்கு சென்றுள்ளனர். கொட்டாப்பட்டி மடப்புளி கண்மாய் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத இருவர் டூவீலரில் வந்து ராமாயி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
பிப்.9ம் தேதி சிவகங்கை அருகே வாணியங்குடியில் ரோந்து சென்ற போலீசார் சந்தேகம் 2 பேரை விசாரித்துள்ளனர். அவர்கள் போலீசாரை வாளை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர். பிப்.10 பாகனேரியில் புதுவளவு என்ற இடத்தில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டின் படிக்கட்டு மற்றும் அங்கு நிறுத்தியிருந்த டூவீலர் மீது மோதியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்தவர்களை அந்த கும்பல் வாளை காட்டி மிரட்டியுள்ளது.
சிவகங்கை நகர் மதுரை ரோட்டில் உள்ள சர்ச்சில் இரவு 11:30 மணிக்கு சர்ச் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மர்ம நபர் உள்ளே சென்றுள்ளனர். முதலில் சர்ச்சில் முகப்பு பகுதியில் உள்ள கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் வெளியில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். பின்னர் சர்ச் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
சர்ச்சுக்குள் இருந்த 6 உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். அங்கிருந்த கேமராக்களையும் சேதப்படுத்தி கேமரா வயர்களை துண்டித்து திருடி சென்றுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் வீடுகளிலும், கோவில், தேவாலயங்களிலும் தொடர் திருட்டு நடந்துஉள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து திருட்டு பயத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

