/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேவை இல்லங்கள் விருது: கருத்துரு வரவேற்பு
/
சேவை இல்லங்கள் விருது: கருத்துரு வரவேற்பு
ADDED : ஜூலை 29, 2025 12:46 AM
சிவகங்கை: அரசு மற்றும் அரசு சாரா குழந்தைகள் இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அரசு 'முன் மாதிரி சேவை விருது' பெற ஆக.,8க்குள் கருத்துரு சமர்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இயங்கி வரும் அரசு மற்றும் அரசு சாரா குழந்தைகள் இல்லம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு 'முன்மாதிரி சேவை விருது' வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் மற்றும் 4 பிரிவின் கீழ் தலா ரூ.1 லட்சம் பரிசு தொகை யுடன் வழங்க உள்ளனர். இந்த விருதை பெற குழந்தைகள் இல்லங்கள் தங்கள் கருத்துருவினை ஆக., 8ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் நேரிலோ, தபால் மூலமோ ஒப் படைக்க வேண்டும்.
மேலும் விபரத்திற்கு 04575-240 166ல் தெரிந்து கொள்ளலாம்.