/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பக்ரீத்திற்கு ஆடுகள் வழங்குவதாக ரூ. பல லட்சம் மோசடி
/
பக்ரீத்திற்கு ஆடுகள் வழங்குவதாக ரூ. பல லட்சம் மோசடி
பக்ரீத்திற்கு ஆடுகள் வழங்குவதாக ரூ. பல லட்சம் மோசடி
பக்ரீத்திற்கு ஆடுகள் வழங்குவதாக ரூ. பல லட்சம் மோசடி
ADDED : ஜூன் 08, 2025 12:55 AM
சிவகங்கை:சிவகங்கையில் பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வழங்குவதாக கூறி பணம் வசூல் செய்து நுாதன முறையில் மோசடி செய்தவர்களால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
பக்ரீத் பண்டிகைக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள ஆட்டுப்பண்ணை ஒன்றில் ரூ.8 ஆயிரம் கட்டினால் ஓராண்டு கழித்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள ஆடு வழங்குவதாக கூறி சிலர் மக்களை நம்ப வைத்துள்ளனர். அதன்படி சிவகங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 100க்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு ஆட்டிற்கான பணத்தை செலுத்தியுள்ளனர். சிலர் இரண்டு மூன்று ஆடுகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால் பக்ரீத்திற்கு முதல் நாளான நேற்று முன்தினம் கூறியபடி ஆடுகளை வழங்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது வலைதளங்களில் சிவகங்கை முழுவதும் பரவியது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை .