/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒரே மாதத்தில் 3 கோயில்கள் 2 சர்ச்களில் பல லட்சம் திருட்டு
/
ஒரே மாதத்தில் 3 கோயில்கள் 2 சர்ச்களில் பல லட்சம் திருட்டு
ஒரே மாதத்தில் 3 கோயில்கள் 2 சர்ச்களில் பல லட்சம் திருட்டு
ஒரே மாதத்தில் 3 கோயில்கள் 2 சர்ச்களில் பல லட்சம் திருட்டு
ADDED : அக் 12, 2025 04:58 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள், சர்ச்களில் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள், பணம் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாடிநன்னியூர் கருப்பர் கோயிலில் செப்.5 பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 கிராம் எடையுள்ள பொட்டு தாலி, உண்டியல் பணம் திருடப்பட்டது. அன்று இரவே முப்பையூர் அருகே மேக்காரைக்குடியில் உள்ள பிள்ளையார்கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றனர். தேவகோட்டை தாலுகா கீழக்காவனவயலில் உள்ள காவல் கொழுஞ்சி அய்யனார் கோயிலில் உள்ள உண்டியலையும் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதேபோல் சிவகங்கை அருகே சூரக்குளம் ரோட்டில் உள்ள யோகோவின் சர்ச்சில் பூட்டை உடைத்து சர்ச்சில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இன்வெர்ட்டர், பேட்டரி, 10 சேர்களை திருடி சென்றனர்.
அக்.4ம் நாட்டரசன்கோட்டை அருகே பனங்காடி சர்ச்சில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான லேப்டாப் 1, அலைபேசி 1, ஆம்பளிபயர் 2, ஸ்பீக்கர் பாக்ஸ் 4, கீபோர்ட் 1, ஸ்மார்ட் டிவி 2, இன்வெர்ட்டர் 1 உள்ளிட்ட பொருட்கள் திருடியுள்ளனர்.
மாவட்டத்தில் தொடர்ந்து வீடு, கோயில்களில் பூட்டை உடைத்து திருடுவது தொடர் கதையாக உள்ளது. மாவட்ட போலீசார் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்களை விரைவில் பிடிக்க வேண்டும்.