ADDED : அக் 12, 2025 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மேலப்பூங்குடியில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 61 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 61 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 19 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடந்த சிறிய மாட்டு பிரிவில் 42 ஜோடிகளும் பங்கேற்றன.
போட்டியில் பெரிய மாட்டு பிரிவிற்கு 8 கிலோமீட்டர் துாரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிலோ மீட்டர் துாரமும் நடந்தது.
முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர், சாரதிகளுக்கு பரிசு வழங்கினர்.