/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாருக்கு வந்த கழிவு நீர் அகற்றும் வாகனம்
/
திருப்புத்துாருக்கு வந்த கழிவு நீர் அகற்றும் வாகனம்
திருப்புத்துாருக்கு வந்த கழிவு நீர் அகற்றும் வாகனம்
திருப்புத்துாருக்கு வந்த கழிவு நீர் அகற்றும் வாகனம்
ADDED : டிச 22, 2025 06:10 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூருக்கு அனுமதியாகி பயன்பாட்டில் இருந்த கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வேறு பேரூராட்சிக்கு மாற்றியதால் திருப்புத்தூரில் கழிவுநீர் அகற்றுவது பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாகனத்தை இங்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
திருப்புத்தூர் பேரூராட்சியில் கழிவுநீர் வடிகால்கள் பரவலாக உள்ளது. நகரில் பாதாள சாக்கடைத் திட்டமும் இல்லாததால் குடியிருப்பு, வணிக கழிவுநீர் பல இடங்களில் தொட்டிகளில்,வடிகால்களில் தேங்கியுள்ளது.
இதை சில ஆண்டு களுக்கு முன்பு வரை பேரூராட்சியினர் 'டேங்கர்' மூலம் அகற்றி வந்தனர். இந்த நிலையில் பழுதான டேங்கர் செயல்படாத நிலையில், புதிய வாகனம் வாங்கவில்லை.
இதனால் கழிவுநீரை முறையாக அகற்ற முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறியது. இந்தவாய்ப்பை பயன்படுத்தி தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கட்டணம் செலுத்தி கழிவுகளை அகற்றி வந்தனர்.
இந்நிலையில் திருப்புத்தூர் பேரூராட்சிக்கு கடந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவுநீர் அகற்றும் டேங்கர் வாகனம் அனுமதியானது. அதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முடிவானது. நிலையத்திற்கான இடமும் தேர்வானது.
இந்த வாகனம் மூலம் திருப்புத்தூரில் கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் அகற்றும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எனக்கூறி இந்த வாகனத்தை நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்கு மாற்றிவிட்டனர்.
எனவே மீண்டும் திருப்புத்துார் பேரூராட்சிக்கு அந்தவாகனத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.

