/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரியாறு கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
/
பெரியாறு கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
ADDED : ஜூலை 30, 2025 10:02 PM
சிங்கம்புணரி; மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வழியாக ஏரியூர், திருப்புத்துார் பகுதிக்கு பெரியாறு நீட்டிப்பு கால்வாய் செல்கிறது.
சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு, தெற்குத்தெரு, மேலத்தெரு பகுதி கழிவு நீர் அம்பேத்கர் நகர் வழியாக தூதன் கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. கால்வாய் மண் மூடிய நிலையில் கழிவுநீர் முழுவதும் பெரியாறு கால்வாயில் கலக்கிறது. இதனால் அம்பேத்கர் நகரில் இருந்து செல்லும் கால்வாயில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. குடிநீர் ஊருணிகளுக்கு இக்கால்வாய் வழியாகவே பெரியாறு தண்ணீர் கொண்டு செல்லப்படும் நிலையில் அதில் கழிவு நீர் கலப்பது சுற்று வட்டார கிராம மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே கால்வாய்களை சரி செய்து கழிவு நீர் பெரியாறு கால்வாயில் கலக்காமல் தடுக்க வேண்டும்.