/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்வாய் அடைப்பால் தேங்கும் சாக்கடை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நோய் பரவும் அபாயம் l
/
கால்வாய் அடைப்பால் தேங்கும் சாக்கடை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நோய் பரவும் அபாயம் l
கால்வாய் அடைப்பால் தேங்கும் சாக்கடை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நோய் பரவும் அபாயம் l
கால்வாய் அடைப்பால் தேங்கும் சாக்கடை: தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நோய் பரவும் அபாயம் l
ADDED : நவ 28, 2024 05:21 AM

தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்யும் மழை நீர் செல்ல வழியில்லாமல் தொடர்ந்து கழிவு நீரோடு அப்படியே தேங்கி நிற்கும். பல நாள் கழித்து வெயிலில் காயும். கடந்த சில தினங்களுக்கு முன் கன மழை பெய்ததால் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பெருகியதால் பஸ்களில் ஏறவும் இறங்கவும் முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். நகராட்சியினர் கழிவுநீர் வாகனம் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தினர்.
தண்ணீர் தேங்குவதற்கான காரணத்தை கண்டுபிடித்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் விழும் மழைநீர், கழிவுநீர் பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக ஊர் எல்லையில் உள்ள கண்மாய்க்கு செல்லும்.
இதில் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தியாகிகள் பூங்கா முதல் வாடியார் வீதி வரை உள்ள 200 மீட்டர் துாரமுள்ள கால்வாய் முற்றிலும் அடைபட்டு உள்ளது. கால்வாயில் உள்ள தண்ணீரே செல்ல முடியாமல் மாதக் கணக்கில் தேங்கி ஒன்றரை அடி உயரத்திற்கு அப்படியே நிற்கிறது. கழிவு, மண் உட்பட பல பொருட்கள் நிரம்பி தண்ணீர் சிறு துளி கூட செல்ல முடியாமல் அப்படியே சாக்கடை நீராக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
போலீஸ் புறக்காவல் நிலையமே இந்த சாக்கடை துர்நாற்றத்தில் தான் உள்ளது.போலீசார் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. சில தினங்களுக்கு முன் அந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், போலீசார் நகராட்சியினரிடம் நேரிலேயே சாக்கடைக்குள் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்துங்கள் என கூறியும் அதிகாரிகள் ஜகா வாங்கிக் கொண்டனர்.
உடனடியாக அடைப்பை அகற்றுவதோடு அடைப்புக்கான காரணத்தை கண்டறிந்து அப்பகுதியில் கழிவு பொருட்கள் போடாமல் சாக்கடையை திறந்து சுத்தம் செய்யும் வகையில் சிமென்ட் சிலாப் மூலம் மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் இந்த சாக்கடையை சீர் செய்து துர்நாற்றம் நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.