/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவுநீர் தேக்கம்: சேதமான கட்டடத்தால் அவதி
/
இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவுநீர் தேக்கம்: சேதமான கட்டடத்தால் அவதி
இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவுநீர் தேக்கம்: சேதமான கட்டடத்தால் அவதி
இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவுநீர் தேக்கம்: சேதமான கட்டடத்தால் அவதி
ADDED : செப் 13, 2025 03:56 AM

இளையான்குடி: இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள நிலையில் பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் தேங்குவதோடு, கட் டடங்கள் சேதமடைந்து உள்ளதால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.
இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து 180க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாலும், பலர் ஆக்கிரமித்து வருவதாலும் பள்ளி இடம் மிகவும் சுருங்கி வருகிறது. மேலும் பள்ளி வழியாக தேவூரணிக்கு செல்லும் கழிவு நீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு பள்ளி வளாகத்திற்குள் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கழிப்பறைகளும் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வகுப்பறை கட்டடங்களும் மிகவும் சேதமடைந்து அவ்வப்போது கூரைகளின் பூச்சு மாணவிகளின் மேல் விழுவதால் காயமடைகின்றனர்.
பள்ளியில் மைதானம் இல்லாத காரணத்தினாலும் மாணவிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி அமலி ஆரோக்கிய செல்வி கூறியதாவது:
பள்ளி இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
பள்ளி வளாகத்திலும், கழிப்பறைகளிலும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு அடிக்கடி மாணவிகளுக்கு உடல்நல குறைவு வருகிறது.
வகுப்பறை கட்டடங்களும் சேதமடைந்து அவ்வப்போது இடிந்து வருகிறது. மேலும் மைதானமும் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை நீடித்து வருகிறது, என்றார்.