UPDATED : அக் 26, 2026 06:11 PM
ADDED : அக் 26, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவங்கை மாவட்டம் புதுப்பட்டி சக்தி மகன் சுள்ளான் மதன் 26.
இவரை அக்.18 மதியம் 2:00 மணிக்கு ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் கும்பல் ஒன்று கொலை செய்தது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிந்து 13 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை 6 தனிப்படை போலீசார் மதுரை, திண்டுக்கல், கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட பகுதியில் தேடிவந்த நிலையில் முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா 27 சிவகங்கை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.
