ADDED : ஜூலை 20, 2011 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:மானாமதுரை அருகே
ஷேர்ஆட்டோ கவிழ்ந்ததில், எட்டு பேர் காயமுற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம்
பார்த்திபனூர் அருகே மாங்குடியை சேர்ந்தவர்கள் புனிதா(35), சாத்தாயி(45),
ராணி(40), சவுந்திரம் (60), கருப்பாயி (40). இவர்கள் உட்பட 10 பேர் நேற்று
காலை 'ஷேர் ஆட்டோவில்' மானாமதுரை அருகே வன்னிக்குடி நோக்கி சென்றனர்.
ஆட்டோவை பாண்டி (35) ஓட்டிச்சென்றார். காலை 9 மணிக்கு வன்னிக்குடி விலக்கு
அருகே சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், டிரைவர்
பாண்டி, புனிதா உட்பட 8 பேர் காயமுற்றனர். முத்துராமலிங்கம் எஸ்.ஐ.,
விசாரிக்கிறார்.