ADDED : நவ 18, 2024 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே வேம்பத்தூர் சிவன் கோயிலில் நடைபெற்ற சிவ பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இங்குள்ள, ஆவுடைய நாயகி, கைலாசநாதர் கோயிலில் நேற்று மதுரையைச் சேர்ந்த நால்வர் குழு சார்பில் சிவபூஜை நடந்தது. நேற்று அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், குங்குமம், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். சிவாச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து, புனித நீரால் அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.