/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயில்களில் சிவராத்திரி விழா
/
மானாமதுரை கோயில்களில் சிவராத்திரி விழா
ADDED : மார் 06, 2024 05:56 AM
இளையான்குடி, : இளையான்குடி மற்றும் மானாமதுரை பகுதிகளில் உள்ள சிவன் கோயில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் மகா சிவராத்திரி, மாசிக்களரி விழாவிற்கான முன்னேற்பாடு நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் வருடம் தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி மற்றும் மாசிக் களரி திருவிழா மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அனைத்து சிவன் கோயில்களிலும் மற்றும் அனைத்து கோவில்களிலும் இரவு முதல் விடிய,விடிய தொடர்ந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அனைத்து கோவில்களிலும் தற்போது முன்னேற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.இளையான்குடி அருகே அரியாண்டிபுரத்தில் உள்ள பெரிய கருப்பணசாமி, மீனாள் அம்மன் கோயிலில் கோயில் குடிமக்கள் சிவராத்திரி மற்றும் மாசிக்களரி பூஜைக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,மாணிக்கம் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
இதே போன்று இளையான்குடி மற்றும் மானாமதுரை பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தி, புதிதாக வர்ணம் பூசி விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.

