/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவராத்திரி: களைகட்டிய கால்நடை சந்தை
/
சிவராத்திரி: களைகட்டிய கால்நடை சந்தை
ADDED : மார் 06, 2024 06:44 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை நடந்த சந்தையில் ஆடு, கோழி, சேவல் விலை கிடு கிடுவென உயர்ந்து காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவு ஆடு, கோழி உள்ளிட்டவை திருப்புவனம் வட்டாரத்தில் வளர்க்கப்படுகிறது. வாரம் தோறும் நடைபெறும் சந்தையில் ஆடு, கோழி விற்பனைக்கு அதிகளவில் வரும், இதனை வாங்க கேரளா, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருவார்கள், சிவராத்திரி, தீபாவளி, ஆடி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடு, கோழி விலை உயர்வது வழக்கம், வரும் 8ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி நேற்று திருப்புவனம் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரச்சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய சந்தையில் 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ எடை கொண்ட சேவல் 400 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. மூன்று கிலோ எடை கொண்ட வாத்து ஆயிரத்து 300 ரூபாய் எனவும் கிண்ணிக்கோழிகள் ஜோடி ஆயிரத்து 500 ரூபாய் என்றும், வான்கோழிகள் ஜோடி 600 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டது.

