/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சி ஆபீசில் படப்பிடிப்பு: தெரியாது என்கிறார் கமிஷனர்
/
நகராட்சி ஆபீசில் படப்பிடிப்பு: தெரியாது என்கிறார் கமிஷனர்
நகராட்சி ஆபீசில் படப்பிடிப்பு: தெரியாது என்கிறார் கமிஷனர்
நகராட்சி ஆபீசில் படப்பிடிப்பு: தெரியாது என்கிறார் கமிஷனர்
ADDED : செப் 24, 2024 07:14 AM

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில், நேற்று காலை புதிய படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அலுவலக நேரமான காலை 10:30 மணிக்கு நகராட்சி நுழைவாயில், முன் பகுதி, கமிஷனர் அறை முன் சினிமா படப்பிடிப்பு நடந்தது.
வெள்ளை வேட்டி, சட்டையில் ஆண்கள் சிலர், நகராட்சி அலுவலக நுழைவாயிலில் நடிப்பதற்காக கூடியிருந்தனர்.
ரோட்டை மறித்து நடந்த படப்பிடிப்பிற்காக, மாற்றுப்பாதையில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
நகராட்சி தலைவர் என்று பெயர் பொறிக்கப்பட்ட வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்கி, அலுவலகத்திற்குள் செல்லும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டன. பொதுமக்கள் கூட்டமாக நின்று பார்வையிட்டனர்.
சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கூறுகையில், ''நகராட்சி பகுதியில் நேற்று மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றனர்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், ''எனக்கு எதுவும் தெரியாது. நான் மீட்டிங்கில் உள்ளேன். அலுவலகத்தில் கேட்டு கூறுகிறேன்,'' என்றார்.