நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை -காரைக்குடி மெயின்ரோட்டில் கருப்பட்டி காபி கடை உள்ளது.நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டி சென்றனர்.
நேற்று காலை கடை திறக்க வந்த போது கடை ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர்.உள்ளே சென்று பார்த்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ. 8 ஆயிரம் , ஊர் பொது ரூபாய் ரூ 32 ஆயிரம் என ரூ 40 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.போலீசார் விசாரிக்கின்றனர்.